Published : 14 Apr 2021 03:15 AM
Last Updated : 14 Apr 2021 03:15 AM
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அவர்களிடம் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
பொதுஇடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, போதுமான மாத்திரையை கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், பூங்காக்கள் மற்றும் சந்தை உள்ளிட்ட இடங்களில் வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படு கிறதா? என சுகாதாரத் துறையினர் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால், சுகாதாரத் துறை துணை இயக்குநர் அஜித்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT