Published : 14 Apr 2021 03:15 AM
Last Updated : 14 Apr 2021 03:15 AM
வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சார்பில் கடந்த 4 நாட்களில் ரூ.7 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக 7 மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்று பரவும் நபர்களின் எண்ணிக்கை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து, மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியில் நடமாடுபவர்களிடம் அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர் சண் முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும் பொதுமக்களிடம் காவல் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர். வேலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் என முக்கிய சந்திப்புகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதி களிலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் சுகா தாரத் துறை சார்பில் மட்டும் கடந்த 4 நாட்களில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் அபராதம் வசூலித் துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 30 ஆயிரம் பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காவல் துறையினரும் முகக்கவசம் அணி யாமல் செல்லும் வாகன ஓட்டி களிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் காவல் துறையினர் சார்பில் கடந்த 4 நாட்களில் மட்டும் முகக்கவசம் அணியாமல் கார், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், நேற்று முன்தினம் மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 20 ஆயிரம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
காவல் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் சார்பில் கடந்த 4 நாட்களில்மட்டும் மொத்தம் ரூ.7 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் சோதனையில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 50 ஆயிரம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT