Published : 14 Apr 2021 03:15 AM
Last Updated : 14 Apr 2021 03:15 AM
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் நெல் மூட்டைகள் நிறைந்துள்ளதால், வரும் 19-ம் தேதி வரை நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்தன. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் படை யெடுத்தனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள 8 கிடங்குகளிலும் சுமார் 40 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டன.
இந்நிலையில் கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால், நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் அபாயம் உருவானது. இதன் எதிரொலியாக, சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகள் கவனத்துக்கு, அனைத்து கிடங்குகளிலும் நெல் மூட்டைகள் நிறைந்து உள்ளதால் நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம். வரும் 20-ம் தேதி முதல் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வரவும்” என தெரிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT