Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM

போளூர் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு :

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எழுவாம்பாடி கிராமத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆட்சி யருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தி,மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடப்பட்ட மனுவில், “எழு வாம்பாடி கிராமத்தில் 650 வீடுகள் உள்ளன. இங்கு, 1,850 பேர் வசிக்கின்றனர்.

இந்நிலையில், எங்கள் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அதன் அருகே பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. செல்போன் டவர் அமைக் கப்படுவதால், கிராம மக்களுக்கு தீங்கு ஏற்படும்.

எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மூளைக் காய்ச்சல், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும். மனிதர்கள் மட்டும் இல்லாமல் பறவைகள் மற்றும் விலங்குகளும் பாதிக்கப் படும். இதனால், எங்கள் கிராமமே சீர்குலைந்துவிடும்.

எனவே, செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x