Published : 12 Apr 2021 03:20 AM
Last Updated : 12 Apr 2021 03:20 AM
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்ட வேண்டும் என பால் உற்பத்தியாளர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டார்மங்கலம் கிராமத்திலுள்ள டி.ஆர்.டி.1094 நாட்டார்மங் கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில், கூத்தனூர், ஈச்சங்காடு, நாட்டார்மங்கலம் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த 600 பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கிருந்து தினமும் காலை, மாலை இருவேளையும் 2,600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு பால் கூட்டுறவு ஒன்றியத் துக்கு அனுப்பப்படுகிறது.
இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால், கடந்த 27 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத் தில், நெருக்கடியான சூழலில் செயல்பட்டு வருகிறது. மாதம் ரூ.4 ஆயிரம் வாடகை கொடுத்து தனியார் கட்டிடத்தில் இயங்கிவரும் நாட்டார்மங்கலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காக 2016-ம் ஆண்டு ரூ.10.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டிடம் கட்டுவதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டிய தால் அந்த நிதி திரும்பிச் சென்று விட்டது. இந்நிலையில், பால் சொசைட்டிக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட நாட்டார்மங்கலத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான சாவடி இடத்தை தேர்வு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT