Published : 12 Apr 2021 03:20 AM
Last Updated : 12 Apr 2021 03:20 AM
வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை இடமாற்றம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாரச்சந்தை, காய்கறி சந்தை, உழவர் சந்தை, மீன் மார்க்கெட், இறைச்சி விற்பனைகளுக்கு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
வேலூரில் மொத்த காய்கறி விற்பனை கடைகளில், சில்லரை காய்கறி வியாபாரிகளின் விற் பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளன. இதற்கு, சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்த காய்கறி கடைகள் மாங்காய் மண்டி அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பூக்கடைகள் அனைத்தும் ஊரிசு பள்ளியின் விளையாட்டு மைதானத் துக்கு இடமாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வந்த வாரச்சந்தைகள் அனைத்தும்ஏற்கெனவே நடைபெற்ற பள்ளி மைதானங்களில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள உழவர் சந்தைகள் ஏற்கெனவே இயங்கி வந்த பள்ளி மைதானங்களில் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு வேலூர் நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையொட்டி, வேலூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வணிகர்களின் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் நேற்று நடை பெற்றது.
பின்னர் வணிகர் சங்க மாவட்டத் தலைவர் ஞானவேலு, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மொத்தம் 120 காய்கறி கடைகள்உள்ளன. சுமார் 160 சில்லறை விற்பனை கடைகளும், 80 பூக்கடைகள், 556 மளிகைக்கடைகள், அரிசி மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தேங்காய், பாத்திரங்கள், பேன்சி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு கரோனா காலத்தில் காய்கறி கடைகள் மற்றும் பூக்கடைகள் மட்டுமே மாற்று இடத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்திருந்தது. மீதமுள்ள 556 கடைகளை மாவட்டம் நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை. கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு அனைத்து பொருட் களும் கிடைப்பதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தோம்.
இந்நிலையில், கரோனா 2-வது அலை எனக்கூறி மீண்டும் காய்கறி கடைகள் மற்றும் பூக்கடைகளுக்கு இடமாற்றம் செய்து இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, எங்களுக்கு புதிய இடத்தில் கடைகள் ஒதுக்க வேண்டாம். இரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நேதாஜி மார்க்கெட் கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதியாக நேதாஜி மார்க்கெட் வணிகர்கள் சங்க அலுவலகத்தில் மருத்துவமனை அமைத்து தர வேண்டும்.
நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 11 நுழைவு வாயில்களிலும் வணிகர் சங்கம் சார்பில் பாது காவலர்கள் அமர்த்தப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்களை மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம். ஆகவே, எங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர் வாகம் ஏற்காவிட்டால் கடை யடைப்பு போராட்டத்தில் ஈடுபடு வோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT