Published : 11 Apr 2021 03:18 AM
Last Updated : 11 Apr 2021 03:18 AM
வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்துக்கும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் சகோதரர் துரை சிங்காரத்துக்கும் கரோனா தொற்று உறுதியானதால் இருவரும் தங்களது வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டனர்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அப்போது, அவருக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதில், லேசான கரோனா தொற்று இருந்ததால் கோட்டூர் புரத்தில் உள்ள வீட்டில் துரைமுருகன் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து காட்பாடி யில் உள்ள துரைமுருகன் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், துரைமுருகனின் மகனும் வேலூர் தொகுதி திமுக நாடாளு மன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் சகோதரர் துரை சிங்காரத்துக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் இருக்கும் கதிர்ஆனந்த் அங்கேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதேபோல், காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டில் துரைசிங்காரம் தனிமைப்படுத்திக் கொண் டுள்ளார் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT