Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM
நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் 13 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுவதாக பாமக வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஜெகன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர்சாகமூரியிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
நெய்வேலி தொகுதியில் அடங்கிய கோரணப்பட்டு, புலியூர், புலியூர்காட்டுசாகை, வசனாங்குப்பம், சொரத்துார் உள்ளிட்ட 13 வாக்குப் பதிவு மையங்களில், குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
இல்லை என்றால் வாக்களிக்கக் கூடாது என சிலர் அச்சுறுத்தல் ஏற்படுத் தியுள்ளதாக தெரிகிறது.
அந்த 13 வாக்குப்பதிவு மையங் களிலும் கடந்த முறை நடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களின் போது, இதே நிலை தான் இருந்தது. வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும், மிரட்டப்படுவதுடன், அவர்களது ஜனநாயக கடமை மறுக்கப்பட்டும் வருகிறது.
அச்சுறுத்தல் காரணமாக வாக்காளர் கள் யாரும் புகார் கொடுக்க முன் வருவதில்லை.
வாக்காளர்கள் சுதந்திரமாக வாக் களிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு தினத்தில் வெளி யாட்களுக்கு அனுமதி மறுப்பு, வாக்குப் பதிவு மையங்கள் உள் மற்றும் வெளிப்புறம் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன் நகல்கள் நெய்வேலி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நெய்வேலி, பண்ருட்டி டிஎஸ்பிக்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT