Published : 03 Apr 2021 03:15 AM
Last Updated : 03 Apr 2021 03:15 AM
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்றதாக அதிமுக வேட்பாளர் தரப்பில் இருந்து ரூ.18 லட்சத்து 41 ஆயிரம் ரொக்கப்பணம், வாக்காளர் பட்டியல், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப் பட்டது. இது தொடர்பாக அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், 8 பேர் கைது செய்யப் பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட் டத்தில் உள்ளது. நாளை (4-ம் தேதி) மாலை 7 மணிக்கு பிரச் சாரம் முடியவுள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சியினர் மறைமுகமாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தின் ஆதரவாளர்களிடம் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சுமார் ரூ.10.50 கோடி பணம் பறிமுதல் செய்யப் பட்டது.
ரூ.18.41 லட்சம் பறிமுதல்
அதன்பேரில் தேர்தல் செலவின பார்வையாளர் அமித் கரண், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டி, பறக்கும் படை அலுவலர் நரேஷ் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் குழுவினர் நள்ளிரவு 1 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிகாரிகளைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை, காவலர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து, அந்த உணவகத்தில் நேற்று அதிகாலை வரை நடைபெற்ற சோதனையில் ரூ.18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டது.
இதில், ரூ.1,300 தொகையைத் தவிர்த்து மற்ற அனைத்தும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு லேப்டாப், 2 செல்போன்கள், 3 மதுபாட்டில்கள், ஏடிஎம் கார்டு, வங்கி காசோலை புத்தகம், துண்டுப் பிரசுரங்கள், வாக்காளர் பட்டியல், வார்டு வாரியாக வாக்காளர்ளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேடுகளையும் பறிமுதல் செய்தனர்.
ஒரு வாக்குக்கு 500 ரூபாய்
பறிமுதல் செய்யப்பட்ட குறிப்பேடுகளில் வாக்குச்சாவடி வாரியாக பணம் விநியோகம் செய்த நபர், அவரது செல்போன் எண், எத்தனை வாக்காளர்களுக்கு ரூ.500 வீதம் பணம் விநியோகம் செய்யப்பட்டது, மீதியுள்ள தொகை குறித்த விவரங்கள் முழுமையாக எழுதியுள்ளனர்.இதில், சேண்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட 99-வது வாக்குச்சாவடியில் உள்ள 726 வாக்காளர்களுக்கும் மணிகண்டன் என்பவர் மூலமாக ரூ.3 லட்சத்து 63 ஆயிரத்தை 100 சதவீதம் விநியோகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. பணம் விநியோகம் செய்தவர்கள் தங்களுக்குரிய பகுதியில் எவ்வளவு பணம் விநியோகிக்கப்பட்டது என்ற கணக்கை முறையாக ஒப்படைத்தும் கையெழுத்திட்டுள்ளனர்.
8 பேர் கைது
அதன்பேரில், 147 (சட்ட விரோதமாக கூடுதல்), 294-பி (ஆபாசமாக பேசுதல்), 353 (அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 117-இ (வாக் காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் வாங்க முயன்றது), 506 (1)-(மிரட்டல் விடுத்தது) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேட்பாளர் ராமுவைத் தவிர்த்து மற்ற 8 பேரை கைது செய்து குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
வருமான வரித்துறை விசாரணை
தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணம் ஒப் படைக்கப்பட்டது. மேலும், பறி முதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அவர்கள் தனியாக விசாரணை நடத்த உள்ளனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT