Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த
11,646 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை பெற தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், நேரில் வாக்களிக்க இயலாதவர்கள், சுய விருப்பத்தின்பேரில், தங்களது வாக்குகளை தபால் வாக்கு மூலம் செலுத்தலாம் என்று அறிவித்தது.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் விருப்ப படிவம் பெறப்பட்டது. இதில், கெங்கவல்லி தொகுதியில் 289 மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் 630 பேர், ஆத்தூர் தொகுதியில் 260 மாற்றுத்திறனாளிகள், மூத்தோர் 660 பேர், ஏற்காடு தொகுதியில் 300 மாற்றுத்திறனாளிகள், மூத்தோர் 630 பேர், ஓமலூர் தொகுதியில் 251 மாற்றுத்திறனாளிகள், மூத்தோர் 781 பேர், மேட்டூர் தொகுதியில் 228 மாற்றுத்திறனாளிகள், மூத்தோர் 844 பேர், எடப்பாடி தொகுதியில் 711 மாற்றுத்திறனாளிகள், மூத்தோர் 1,410 பேர் தபாலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
மேலும், சங்ககிரி தொகுதியில் 202 மாற்றுத்திறனாளிகள், மூத்தோர் 1,124 பேர், சேலம் மேற்கு தொகுதியில் 103 மாற்றுத்திறனாளிகள், மூத்தோர் 604 பேர், சேலம் வடக்கு தொகுதியில் 119 மாற்றுத்திறனாளிகள், மூத்தோர் 877 பேர், சேலம் தெற்கு தொகுதியில் 112 மாற்றுத்திறனாளிகள், மூத்தோர் 675 பேர், வீரபாண்டி தொகுதியில் 134 மாற்றுத்திறனாளிகள், மூத்தோர் 702 பேர் தபாலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, தபால் வாக்கு செலுத்த விரும்பிய 2,709 மாற்றுத் திறனாளிகள், மூத்தோர் 8,937 பேர் என மொத்தம் 11,646 பேரிடமிருந்து தபால் வாக்குகளை பெறும் பணி நேற்று தொடங்கியது.
தபால் வாக்கு செலுத்த விருப்ப மனு கொடுத்தவர்களின் வீடுகளுக்கு தேர்தல் ஊழியர்கள் சென்று தபால் வாக்குகளை அதற்கான பெட்டிகளில் பெற்று வருகின்றனர்.சேலம் தெற்கு சட்டப்பேரவத் தொகுதிக்கு உட்பட்ட அன்னதானப்பட்டி அம்பேத்கர் நகரில், தேர்தல் பிரிவு ஊழியர்கள் தனது வீட்டுக்கு கொண்டு வந்த வாக்குப் பெட்டியில் தபால் வாக்கை செலுத்திய மூதாட்டி. படம்: எஸ். குரு பிரசாத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT