Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM
தேனி தனியார் பள்ளியில் 5 ஆசிரியைகளுக்கு கரோனா கண்டறியப்பட்டது.
தேனி, கம்பம் சாலை முத்துத்தேவன்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்புகள் நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் இரு ஆசிரியைகளுக்கு கரோனா அறிகுறி இருந்தது. பின்னர் நடந்த சோதனையில் அது உறுதியானது.
இதைத் தொடர்ந்து உடன் பணிபுரிந்த 60 ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு தொற்று இருந் தது. இவர்களும் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, மாணவ, மாணவியருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் வகுப்பறை, வளாகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT