Published : 01 Apr 2021 03:17 AM
Last Updated : 01 Apr 2021 03:17 AM
வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரு கின்றன. அதன்படி, வேலூர் மாவட் டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வலி யுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுள்ள கிரீன் சர்க்கிள்வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமை வகித்து மாரத்தான் போட்டியை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். மாணவர்கள் பிரிவில் கோகுல்நாத் முதலிடமும், அமர்நாத் 2-ம் இடமும், விஷ்வா 3-ம் இடமும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் ரேவதி முதலிடமும், இந்துமதி 2-ம் இடமும், சிவரஞ்சனி 3-ம் இடமும் பிடித்தனர். முதல்3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழை ஆட்சியர் சண்முக சுந்தரம் வழங்கிப் பாராட்டினார்.
அதேபோல, வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘உங்கள் வாக்கு உங்கள் எதிர் காலம்’ என்ற வாசகம் அடங்கிய 10 ஆயிரம் ஒட்டு வில்லைகள் மாவட்ட முழுவதும் இரு சக்கர வாகனங்கள், வணிக வளாகங்கள், வீடுகளில் ஒட்டுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்குமரன், விளையாட்டுத் துறை அலுவலர் ஆலிவாசன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் திருமணி, ஜெய காந்தன், வெங்கடேசன், மேலாளர் நோயலின் ஜான், விளையாட்டு ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஜூனியர் சேம்பர் இன்டர் நேஷனல் நிர்வாகிகள் யுவராஜ், சதீஷ்கண்ணா, சரஸ்வதி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT