Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM

சங்கரன்கோவிலில் 15 மி.மீ. மழை :

தென்காசி/ திருநெல்வேலி

தென்காசி மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் சங்கரன்கோவிலில் 15 மி.மீ., தென்காசியில் 11.6 மி.மீ., அடவிநயினார் அணையில் 10 மி.மீ., செங்கோட்டையில் 7 மி.மீ., கருப்பாநதி அணையில் 6.5 மி.மீ., குண்டாறு அணையில் 6 மி.மீ., ஆய்க்குடியில் 3.4 மி.மீ., சிவகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது.

சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் தென்காசி மாவட்டத்தில் கோடை வெப்பம் தணிந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை. கடனாநதி அணை நீர்மட்டம் 70.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 67.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 55.61 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 32 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 43 அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 2.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பாளையங்கோட்டையில் 2 மி.மீ. மழை பெய்திருந்தது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 108.95 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 55 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 604 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96.65 அடியாக இருந்தது. அணைக்கு வி நாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 445 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 44.15 அடியாகவும், 22.96 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட நம்பியாறு நீர்மட்டம் 13.05 அடியாகவும், 52.50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 8.75 அடியாகவும் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x