Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்களிக்க வரும் - மாற்றுத்திறனாளிகளுக்காக 1,400 புதிய சக்கர நாற்காலிகள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை கிராமத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் தபால் வாக்களித்த மூதாட்டி தனம்மாள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வாக் களிக்க வரும் மாற்றுத்திறனாளி களுக்காக 1,400 சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் விருப்பம் தெரிவித் துள்ள 8,531 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் இருந்து தபால் வாக்குகள் பெறும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பணி 2-வது நாளாக நேற்றும் நடைபெற்றது.

செங்கம் அடுத்த கண்ணக் குருக்கை கிராமத்தில் வசிக்கும் 82 வயது மூதாட்டி தனம்மாள் மற்றும் 90 வயது மாற்றுத்திறனாளி முதியவர் ராமலு ஆகியோரது வீட்டுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். பின்னர் அவர்கள் இருவரும், தபால் வாக்குகளை பெட்டியில் செலுத்தினர்.

இதையடுத்து, செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களில் வேட்பாளர் சீட்டு பொருத்தும் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தேர்தல் பொது பார்வையாளர் அருண் கிஷோர் டோங்க்ரே ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, “திருவண்ணா மலை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டு வருகின்றன. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சீட்டு பொருத்தும் பணி நடைபெறுகிறது. தபால் வாக்கு செலுத்த 8,531 மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி முதல் நாளான நேற்று (நேற்று முன் தினம்) 703 பேர் தபால் வாக்கு செலுத்தி உள்ளனர்.

செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 382 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில், 33 வாக்குச் சாவடிகள் பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிக்கு தேவையான அனைத்து பொருட்களும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவல் தடுப்பு மருத்துவ பாதுகாப்பு பொருட் களான முகக்கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட பொருட் கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 1,400 சக்கர நாற்காலிகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. தி.மலை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 8 கம்பெனி மத்திய துணை ராணுவ படையினர் வந்துள்ளனர்” என்றார்.

இதையடுத்து, பக்கிரிபாளையம் மற்றும் மாவட்ட எல்லையான ஆணைவாடி சோதனைச் சாவடியில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x