Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் - வேட்பாளர்களின் பெயர் பட்டியல் பொருத்தும் பணி தொடக்கம் :

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னத்துடன் கூடிய வேட்பாளர்கள் பெயர் அடங்கிய பட்டியலை பொறுத்தும் பணியில் ஈடுபட்ட தேர்தல் பிரிவு ஊழியர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நாள் அன்று பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களுடன் கூடிய வேட்பாளர்களின் பெயர் பட்டியல் பொருத்தும் பணி தொடங்கியது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4,280 வாக்குச் சாவடிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று பயன்படுத்த தலா 5,142 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்கள் 5,740 ஆகியவை ஏற்கெனவே, கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிட்ட பின்னர் 16-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும்6 தொகுதிகளில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங் களை பயன்படுத்த வசதியாக கூடுதலாக 2,819 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஒவ்வொரு தொகுதி யிலும் போட்டியிடும் வேட்பாளர் கள், அவர்களின் சின்னம் ஆகியவை அடங்கிய பெயர் பட்டியல் தேர்தல்ஆணையம் மூலம் சென்னையில் அச்சிடப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு அந்த பட்டியல் வழங்கப் பட்டுள்ளன.

தொடர்ந்து, ஒவ்வொரு தொகுதியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னத்துடன் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, “ஒவ்வொருசட்டப்பேரவைத் தொகுதிக்கும், ‘பெல்’ நிறுவன பொறியாளர்கள் இருவர் வீதம் மொத்தம் 22 பொறியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அந்தந்த தொகுதி களின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொறியாளர்கள் முன்னிலையில், சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பெயர் பட்டியலை தேர்தல் பிரிவு ஊழியர்கள் பொருத்தி வருகின்றனர். இப்பணி ஓரிரு நாட்களில் நிறைவடையும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x