Published : 30 Mar 2021 03:16 AM
Last Updated : 30 Mar 2021 03:16 AM
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான வாக்கு எண்ணும் மையங்க ளில் உள்ளூர் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், மேட்டூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியிலும், ஏற்காடு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய தொகுதிகளுக்கான வாங்கு எண்ணும்மையம் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியிலும், கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய தொகுதிகளுக் கானவாக்கு எண்ணும் மையம் தலைவாசல் அடுத்தமணி விழுந்தானில்உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியிலும், எடப்பாடி, சங்ககிரி தொகுதிக்களுக்கான வாக்கு எண்ணும் மையம் சங்ககிரி அடுத்தவீராச்சிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப் பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 4,280 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இம்மையங்களில் வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்து வர நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இதுதொடர் பாக காவல் துறை உயர் அதிகாரி கள் இம்மையங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தேவையான நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.
இதன்படி, வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தின் உள்பகுதி, வாக்கு எண்ணும் வளாகத்தைச் சுற்றியும், மையத்துக்கு வெளியே என மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதில், உள்ளூர் போலீஸாருடன் துணை ராணுவத்தினரும் இணைந்து பணியில் ஈடுபடுவார்கள். இதேபோல் வாக்குச்சாவடி களில் முகப்பு பகுதிகளிலும், வளாகங் களிலும், நுழைவு வாயில் மற்றும் வெளிப்புறங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளன.
இதற்காக துணை ராணுவத் தினர் மற்றும் உள்ளூர் போலீஸாரின் பணி விவரப்பட்டியலை காவல் துறை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT