Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM
கரூர் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால் செலவிடப்படும் தேர்தல் தொடர்பான செலவின கணக்குகளை தேர்தல் செலவின பார்வை யாளர்கள் பியூஸ் பாட்டியா, ஐதீபக்குமார் ஆகியோர் கடந்த 26-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.
முதல் ஆய்வு கூட்டத்தில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் 31 வேட்பாளர்கள், கரூர் தொகுதியில் போட்டியிடும் 74 வேட்பாளர்கள், கிருஷ்ணரா யபுரம் தொகுதியில் போட்டியிடும் 26 வேட்பாளர்கள், குளித்தலை தொகுதியில் 18 வேட்பாளர் கள் கலந்து கொண்டனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு தொடர்பான பதிவேடுகள், ரசீதுகள், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் உரிய அனைத்து அசல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி தேர்தல் செலவினத்தை செலவின பார்வையாளர்களின் ஆய்வுக்கு உட்படுத்துவது தேர்தல் விதிமுறைகளின்படி வேட்பாளர்களின் முக்கிய கடமை யாகும். அடுத்த ஆய்வு கூட்டம் நாளையும்(மார்ச் 30), அதற்கடுத்த ஆய்வுக்கூட்டம் ஏப். 3-ம் தேதியும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. ஆய்வு கூட்டத்தில் அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் செலவின முகவர்களும் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT