Published : 27 Mar 2021 03:15 AM
Last Updated : 27 Mar 2021 03:15 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களில் 8,349 வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் எண்ணிக்கை 20,77,440-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 20-01-21-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 10,55,220 பெண்களும், 10,13,774 ஆண்களும், 97 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 20,69,091 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அதன்பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் பணி கடந்த 19-ம் தேதி வரை நடை பெற்றது. அதில், 5,133 பெண்களும், 3,898 ஆண்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 9,034 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் 327 பெண்களும், 350 ஆண்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும் என 685 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்னர்.
இதனால், வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 19-ம் தேதி நிலவரப்படி 10,60,026 பெண்களும், 10,17,322 ஆண்களும், 92 மூன்றாம்பாலினத்தவர்களும் என மொத்தம் 20,77,440-ஆக உயர்ந் துள்ளது. இதில், 4,806 பெண்களும், 3,548 ஆண்களும், மற்றும் 3 மூன் றாம் பாலினத்தவர்களும் என வாக்காளர் பட்டியலில் 8,349 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT