Published : 24 Mar 2021 03:16 AM
Last Updated : 24 Mar 2021 03:16 AM

தி.மலை மாவட்டத்தில் - தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்கும் தேதி அறிவிப்பு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் போட்டி யிடும் 122 வேட்பாளர்களும் 3 முறை தேர்தல் செலவு கணக்கு களை சமர்ப்பிப்பதற்கான தேதியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேர்தல் செலவின பார்வை யாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்பாக தேர்தல் செலவுகளை 3 முறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

செங்கம் (தனி) தொகுதி வேட்பாளர்கள் வரும் 27, 31 மற்றும் ஏப்ரல் 4-ம் தேதியும், தி.மலை தொகுதி வேட்பாளர்கள் வரும் 26, 30 மற்றும் ஏப்ரல் 3-ம் தேதியும், கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்பாளர்கள் வரும் 26, 31 மற்றும் ஏப்ரல் 4-ம் தேதியும், கலசப்பாக்கம் தொகுதி வேட் பாளர்கள் வரும் 25, 30 மற்றும் ஏப்ரல் 3-ம் தேதியும் சமர்ப்பிக்க வேண்டும்.

3 முறை சமர்ப்பிக்கவேண்டும்

இதேபோல், போளூர் தொகுதி வேட்பாளர்கள் வரும் 27, 31 மற்றும் ஏப்ரல் 4-ம் தேதியும், ஆரணி தொகுதி வேட்பாளர்கள் வரும் 26, 30 மற்றும் ஏப்ரல் 3-ம் தேதியும், செய்யாறு தொகுதி வேட்பாளர்கள் வரும் 26, 30 மற்றும் ஏப்ரல் 3-ம் தேதியும், வந்தவாசி (தனி) தொகுதி வேட்பாளர்கள் வரும் 27, 31 மற்றும் ஏப்ரல் 4-ம் தேதியும் சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் அல்லது அவரது முகவர்கள், தேர்தல் செலவு கணக்குகளுடன் 3 முறை சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x