Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM

சேலம் மாவட்டத்தில் 226 வேட்புமனுக்கள் ஏற்பு :

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 412 வேட்புமனுக்களில் முதல்வர் பழனிசாமியின் வேட்புமனு மற்றும் பிரதானக் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்ட 226 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி முடிவடைந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதானக் கட்சிகளின் வேட்பா ளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்ட 412 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. இதில், கெங்கவல்லி (தனி)தொகுதியில் 24 வேட்புமனுக் களில் 12 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. ஆத்தூர் (தனி) தொகுதியில் 21 வேட்புமனுக் களில் 13 மனுக்களும், ஏற்காடு (தனி) தொகுதியில் 24 வேட்புமனுக்களில் 13 மனுக்களும், ஓமலூர் தொகுதியில் 38 வேட்பு மனுக்களில் 18 மனுக்களும், மேட்டூர் தொகுதியில் 73 வேட்பு மனுக்களில் 16 மனுக்களும் ஏற்கப்பட்டன.

முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், 48 வேட்புமனுக் கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 28 பேரின் மனுக்களும், சேலம் வடக்கு தொகுதியில் 36வேட்புமனுக்களில் 20 மனுக்களும், சேலம் மேற்கு தொகுதியில் 39 வேட்புமனுக்களில் 28 மனுக்களும், சேலம் தெற்கு தொகுதியில் 39 வேட்புமனுக் களில் 30 மனுக்களும், வீரபாண்டி தொகுதியில் 35 வேட்புமனுக்களில் 22 வேட்புமனுக்களும், சங்ககிரி தொகுதியில் 35 வேட்பு மனுக்களில் 26மனுக்களும் ஏற்கப்பட்டன.

மாவட்டத்தில் மொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 412 வேட்புமனுக்களில் பிரதான கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 226 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x