Published : 19 Mar 2021 03:16 AM
Last Updated : 19 Mar 2021 03:16 AM

கரோனா பரவலை கட்டுப்படுத்த வாக்கு எண்ணும் மையங்களில் - முகவர்கள் வந்து செல்ல தனித்தனி பாதை : வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் அறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை நேற்று ஆய்வு செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். அருகில், எஸ்பி செல்வகுமார் உள்ளிட்டோர்.

வேலூர்

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முக வர்கள் வந்து செல்ல தனித்தனி பாதை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தர விட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி 3 மையங்களில் நடைபெற உள்ளன. குடியாத்தம் (தனி) மற்றும் கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி வேலூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலும், காட்பாடி சட்டப் பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணும்மையம் காட்பாடி சட்டக் கல்லூரியிலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையங் களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் தர், வட்டாட்சியர்கள் வத்சலா (குடியாத்தம்), ராஜேஸ்வரி (கே.வி.குப்பம்), பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் கீர்த்தனா உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒவ்வொரு சுற்றுக்கும் 14 மேஜைகள் என்ற அடிப் படையில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

தொகுதிக்கான அனைத்து சுற்றுகள் முடிந்த பிறகு 5 சதவீதம் எண்ணிக்கையில் உள்ள வி.வி.பாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தனியாக எடுத்து எண்ணவுள்ளனர். இதற்காக தனி பகுதியும் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்படுத்த உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங் களில் கரோனா பரவலை கட்டுப் படுத்தவும், ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களுக்கும் வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்ல தனித்தனியாக வழி ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x