Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM
தி.மலை மாவட்டத்தில் பறக்கும் படை, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரின் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரூ.31 லட்சத்து 70 ஆயிரத்து 460 தொகையை உரியநபர்களிடம் திரும்ப ஒப்படைத் துள்ளனர்.
தி.மலை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 128 மதிப்பிலான 570 அலுமினிய பாத்திரங் களை பறிமுதல் செய்தனர்.
கீழ் பென்னாத்தூர் தொகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொறித்த பைகள் மற்றும் மற்றொரு இடத்தில் நடத்திய சோதனையில் 51 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.17 ஆயிரத்து 280 ஆகும். போளூர் தொகுதியில் திமுகவின் 7 வாக்குறுதிகள் அடங்கிய 9 ஆயிரம்பிரதிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 10 செல்போன்களுடன் 20 ஏடிஎம் கார்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தி.மலை மாவட்டத்தில் பறக்கும் படை, தேர்தல் நிலை கண்காணிப்பு குழு வினர் இதுவரை நடத்திய 69 சோதனைகளில் ரூ.68 லட்சத்து 94 ஆயிரத்து 195 மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதில், பணம் பறிமுதல் தொடர்பாக புகார்களில் மேல் முறையீடு செய்யப்பட்ட 31 புகார்களில் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டு ரூ.31 லட்சத்து 70 ஆயிரத்து 460 மதிப்புள்ள பணத்தையும், ஒரே ஒரு புகாரில் ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 128 மதிப்பிலான பொருட்களையும் உரிய நபர்களிடம் திருப்பி ஒப்படைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT