Published : 17 Mar 2021 03:16 AM
Last Updated : 17 Mar 2021 03:16 AM

வேலூரில் பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா :

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட அகில இந்திய பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியர் சங்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நேற்று தர்ணா நடைபெற்றது. இதற்கு, மாவட்டத் தலைவர் ஏழுமலை, மாவட்டச் செயலாளர் ஜோதி சுதந்திரநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பென்ஷன் மாற்றம் செய்ய வேண்டும், 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், மருத்துவப் படி மற்றும் மருத்துவ பில் தொகைக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட வற்றை வலியுறுத்தி போராட் டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x