Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மேலும் 2 தொழிலாளர்கள் நேற்று உயிரிழந்தனர். அதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
ஆமத்தூர் அருகே உள்ள குருமூர்த்திநாயக்கன்பட்டியில் விசாக் என்பவருக்குச் சொந்தமான மத்தாப்பு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள மருந்து கலவை அறையில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த அதேபகுதியைச் சேர்ந்த வீராச்சாமி(55), முருகேசன் என்பவரது மனைவி பஞ்சவர்ணம்(48), ஆமத்தூரைச் சேர்ந்த புதுராஜா(40), முத்துலாபுரத்தைச் சேர்ந்த நடராஜன்(50) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி புதுராஜா உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து வீராச்சாமி, நடராஜன் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இதனால் உயி ரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT