Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM

திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 17-ல் முதல்வர் பிரச்சாரம்் :

திருவாரூர்/ நாகப்பட்டினம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை வகித்தார். மன்னார்குடி வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கம், தமாகா மாவட்டத் தலைவர் குடவாசல் தினகரன், பாஜக ஞானம்.ரவிச்சந்திரன், வி.கே.செல்வம் மற்றும் பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:

அதிமுக அரசுக்கு கடந்த 5 ஆண்டுகளில் எந்த அவப்பெயரும் இல்லை. நல்லாட்சி நடத்தியிருக்கிறோம். அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர். இந்த சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார் என்றார்.

இதேபோல, நாகை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நாகையில் நேற்று நடைபெற்றது. நாகை சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்க.கதிரவனை கூட்டணி கட்சியினர் மத்தியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிமுகம் செய்தார். பின்னர், அவர் பேசியபோது, “அதிமுக சார்பில் வெளியிடப்பட உள்ள தேர்தல் அறிக்கை சிவகாசி சரவெடி போல அதிரும். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தங்க.கதிரவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x