Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM
சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பெரம்பலூர் மாவட் டத்தில் 18 பறக்கும் படை குழுக் கள், 18 நிலை கண்காணிப்புக் குழுக்கள். 4 வீடியோ கண் காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. வெங்கடபிரியா தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது:
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக நடை பெறும் விதிமீறல்களை கட்டுப் படுத்த பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு தலா 9 பறக்கும் படை குழுவினர், 9 நிலை கண் காணிப்பு குழுவினர் மற்றும் 2 வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி பறக்கும் படை குழுவில் வாகனத்துடன் 1 தலைமை அலுவலர், 1 காவல் ஆய்வாளர், 2 காவலர்கள், 1 வீடியோகிராபர் ஆகியோரும், நிலை கண்காணிப்புக் குழுவில் வாகனத்துடன் 1 தலைமை அலுவலர், 1 காவல் ஆய்வாளர், 2 காவலர்கள், 1 வீடியோகிராபர் ஆகியோரும் பணியில் இருப்பர். இவர்கள் தலா 8 மணி நேரம் வீதம் மூன்று ஷிப்ட்களாக பணியில் இருந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
வீடியோ கண்காணிப்புக் குழு வில் வாகனத்துடன் 1 அலுவலர், 1 வீடியோகிராபர் அடங்கிய குழு வினர் பணிபுரிவர் என தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT