Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணைப் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
சேர்வலாறு- 2, மணிமுத்தாறு- 9, கொடுமுடியாறு- 3, நம்பியாறு- 3, சேரன்மகாதேவி- 2, பாளையங்கோட்டை- 6, திருநெல்வேலி- 1.
அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்): பாபநாசம்- 114.95 (143), சேர்வலாறு- 126.84 (156), மணிமுத்தாறு- 103 (118), வடக்கு பச்சையாறு- 45.05 (50), நம்பியாறு- 13.28 (22.96), கொடுமுடியாறு- 13.50 (52.50).
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 197 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 455 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 34.2 மி.மீ. மழை பதிவானது. சிவகிரியில் 22 மி.மீ., கருப்பாநதி அணையில் 18 மி.மீ., ஆய்க்குடியில் 12.6 மி.மீ., கடனாநதி அணையில் 5 மி.மீ., செங்கோட்டையில் 4 மி.மி., குண்டாறு அணையில் 2 மி.மீ. மழை பதிவானது.திடீர் மழையால் குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. கோடையிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி யுடன் குளித்தனர். நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. கடனா நதி அணை நீர்மட்டம் 75.90 அடியாகவும், ராம நதி அணை நீர்மட்டம் 71.75 அடியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT