Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

- அதிமுகவின் தற்போதைய எம்எல்ஏ-க்கள் 15 பேருக்கு தேர்தலில் வாய்ப்பு மறுப்பு : ஈரோட்டில் 5 பேருக்கு மறுப்பு :

சேலம்

சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ-க்களில் 15 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தேர்தலில் சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, மேட்டூர் ஆகிய இரு தொகுதிகள் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 9 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

கடந்த முறை போட்டியிட்டவர்களில் முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம், சேலம் வடக்குத் தொகுதியிலும், ஏற்காடு எம்எல்ஏ சித்ரா, ஏற்காடு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

கடந்த முறை வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் கெங்கவல்லி (தனி) மருதமுத்து, ஆத்தூர் (தனி) சின்னதம்பி, சங்ககிரி ராஜா, ஓமலூர் வெற்றிவேல், சேலம் (தெற்கு) சக்திவேல், மேட்டூர் செம்மலை, வீரபாண்டி மனோன்மணி ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகள் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதில், மொடக்குறிச்சி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி தமாகவிற்கு ஒதுக்கப்படவுள்ளது.

மீதமுள்ள 6 தொகுதிகளில், கோபி தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பவானி தொகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும், ஈரோடு மேற்கு தொகுதியில் கே.வி.ராமலிங்கத்திற்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திற்கு பதிலாக, சண்முகபுரம் கிளைச் செயலாளர் ஜெயக்குமாருக்கும், அந்தியூரில் ராஜா கிருஷ்ணனுக்கு பதிலாக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.எஸ்.சண்முகவேலுக்கும், பவானிசாகர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்குப் பதிலாக பெரியகாளிபட்டி ஊராட்சிச் செயலாளர் பண்ணாரிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x