Published : 10 Mar 2021 03:13 AM
Last Updated : 10 Mar 2021 03:13 AM
வேலூர் மாவட்டத்தில் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட தொகை, பரிசுப் பொருட்கள், போதைப் பொருட் கள், மதுபாட்டில் பதுக்கல் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரி விக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதியும் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கு வதை தடுக்க பறக்கும் படை, தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 10 லட்சத் துக்கும் மேற்பட்ட பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அல்லது மதுபாட்டில்கள் கடத்துவது அல்லது பதுக்கி வைத்திருப்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகாரளிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான புகார்களை விசாரிக்க வருமான வரித்துறை கண்காணிப்பு அலுவ லராக லட்சுமணபாபு என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வருமான வரித்துறை உதவி ஆணையர் லட்சுமணபாபு, வருமானவரி அலுவலர்கள் ஏ.ஆர்.பட்டாபிராமன், கோமதிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பணம், பரிசுப் பொருட்கள் பதுக்கல் குறித்து மாநில கட்டுப்பாட்டு அறையை 1800-425-669 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ்-அப் மூலமாக 94453-94453 என்ற எண்ணிலும், வருமான வரித்துறை உதவி ஆணையர் லட்சுமண பாபுவை 80085-67967 அல்லது 90009-86456 ஆகிய எண்களிலும் வருமானவரி அலுவலர்கள் பட்டாபிராமன் (94459-53487) மற்றும் கோமதி நாயகம் (94459-53521) ஆகியோரின் எண் களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT