Published : 07 Mar 2021 03:17 AM
Last Updated : 07 Mar 2021 03:17 AM

தென்காசியில் போலீஸார் கொடி அணிவகுப்பு :

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தென்காசியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தென்காசி

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவை தொகுதி எல்லைகள், மாவட்ட எல்லைகள், மாநில எல்லைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து துணை ராணுவத்தினருடன் இணைந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

அச்சமின்றி வாக்களிக்க பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தென்காசியில் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தொடங்கிவைத்தார்.

தென்காசி வாய்க்கால் பாலம் அருகில் இருந்து மவுன்ட் ரோடு, காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலை கள் வழியாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிரு ஷ்ணன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x