Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
கடலூர் மாவட்டத்தில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு 18 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் வட்டாரவளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சிஅலுவலராகவும், மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திபரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் அண்ணாகிராமம் வட்டாரவளர்ச்சி அலுவலர் ராதிகா பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், முஷ்ணம் வட்டார வளர்ச்சிஅலுவலர் சுந்தரம் மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் நல்லூர் வட்டாரவளர்ச்சி அலுவலராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள்உட்பட 18 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து,18 பேரும் தங்ளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவு பிறப்பித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT