Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் சமூகநலத்துறை மூலம் ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார்.
527 ஏழை பெண்களுக்கு ரூ.2.22 கோடி நிதியுதவி மற்றும் ரூ.2.03 கோடி மதிப்பிலான 4.2 கிலோ தங்கத்தை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார். தொடர்ந்து, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 162 உழைக்கும் மகளிருக்கு ரூ.40,50,000 மானியத்தில் இரு சக்கர வாகனம், 451 பேருக்கு ரூ.46,22,584 மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 32 பேருக்கு ரூ.32,000 உதவிதொகை, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 3 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், 4 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், வேளாண்மைத்துறை மூலம் 5 பேருக்கு ரூ.89,800 மானியம் என மொத்தம் 7,038 பயனாளிகளுக்கு ரூ.7,50,62,804 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.2,77,20,000 மதிப்பில் அமைய உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மகளிர் திட்ட இயக்குநர் விஜயலட்சுமி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, தனித்துணை ஆட்சியர் ஷீலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT