Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM
மதுரை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.78.18 லட்சம் முறைகேடு செய்தது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை ராமலிங்கா நகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் - பத்மாவதி தம்பதியின் மகன் ஞானசேகர், எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக வெம்பக்கோட்டையைச் சேர்ந்த பாண்டித்துரை மகன் தீபன்பாரதி, காரியாபட்டி அருகே உள்ள செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை சுப்புலட்சுமி, இவரது கண வரும் விருதுநகர் வணிக வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலருமான சந்தி ரன் ஆகியோர் கூறியுள்ளனர். இப்பணியைப் பெறுவதற்கு ரூ.50 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றும், வேலை வாங்கித் தருவதற்கு தனியாகப் பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து தீபன்பாரதி, சுப் புலட்சுமி, சந்திரன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் 1.7.2018 முதல் 17.2.2019 வரை பல்வேறு தவணைகளில் ரூ.78.18 லட்சத்தை பத்மாவதி செலுத்தியுள்ளார்.
ஆனால், ஞானசேகரனுக்கு வேலை வாங்கித் தராமல் ஆசிரி யை உள்ளிட்ட 3 பேரும் ஏமாற்றி வந்துள்ளனர். பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் பத்மாவதி புகார் அளித்தார். அதன்பேரில் சுப்புலட்சுமி உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT