Published : 20 Feb 2021 03:18 AM
Last Updated : 20 Feb 2021 03:18 AM
வேலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடை பெறவுள்ளது. விடுதியில் சேரும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி கையேடு வழங்கப் படுகிறது.
மாணவர்களின் பெற்றோர் களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து விடுதி களிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விடுதிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங் களை பெற்று பூர்த்தி செய்து வரும் 24-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்’’ என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT