Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

பண்ருட்டி அருகே ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கடலூர்

பண்ருட்டி அருகே ரவுடி என் கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டுள்ளது.

கடலூர் குப்பங்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன் (30). இவரை கடலூர் சுப்பராயலு நகரில் 16 -ம் தேதி இரவில்நடந்த வீராங்கன் கொலை வழக்குதொடர்பாக போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.அப்போது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற கிருஷ்ணன் நேற்று முன்தினம் போலீஸால் என்கவுன்டர் செய் யப்பட்டார்.

இந்நிலையில் அவரது தாயார் லட்சுமி (44) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். மனுவில், தனது மகன் ஓவியராகவும், இசைக்குழுவில் டிரம்ப் வாசிப் பவராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், வீரா என்பவரின் கொலை வழக் கிற்காக எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.

அவர்மீது எந்த வழக்கும் இல்லாத நிலையில் காவல்துறை யினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று போலி என்கவுன்டர் செய்துள்ளனர்.

எனவே, இச்செயலில் ஈடுபட்ட காவலர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

கிருஷ்ணனின் உடலை தங்களது தரப்பு மருத்துவர் முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்வதோடு, அதனை முழுமையாக ஒளிப் பதிவு செய்ய வேண்டும்.

கிருஷ்ணனின் வருமானத்தை நம்பியே குடும்பம் நடத்தி வந்ததால் அவரது மனைவிக்கு அரசு வேலையும் குடும்பத்திற்கு ரூ.1 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x