Published : 19 Feb 2021 03:24 AM
Last Updated : 19 Feb 2021 03:24 AM
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மகம் பெருவிழா நேற்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் 28-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் தீபாராதனை, இரவில் மண்டகப்படி தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
வரும் 26-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளும் வைபவமும், தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT