Published : 16 Feb 2021 03:13 AM
Last Updated : 16 Feb 2021 03:13 AM

மாசிமாத முதல் முகூர்த்த தினத்தில் சேலம் கோயில்களில் திருமணம் அதிகரிப்பு

சேலம்

மாசிமாத முதல் முகூர்த்த நாளான நேற்று சேலம் கோயில்களில் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடந்தன.

இதையொட்டி, நேற்று சேலல் சுகவனேஸ்வரர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாத சுவாமி கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், ஊத்துமலை முருகன் கோயில், அம்மாப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில்களில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

இதனால், கோயில்களில் பக்தர்களின் கூட்டமும், திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் கூட்டமும் அதிகளவு காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x