Published : 15 Feb 2021 03:13 AM
Last Updated : 15 Feb 2021 03:13 AM
சாத்தூர் அருகே வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலையில் வருவாய் நிர்வாக ஆணையர், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஆய்வு செய்தனர்.
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக் கிழமை பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இந்தப் பட்டாசு ஆலையில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, மாவட்ட ஆட்சி யர் இரா.கண்ணன், மாவட்ட வரு வாய் அலுவலர் இரா.மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள், சிவகாசியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் துணை கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரேசன், சார்-ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், தொழிலாளர் நலத் துறை அலு வலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
முன்னதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமை வகித்தார். இதில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து, அதற்கான காரணம், அதிகாரிகள் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் உட்பட பல்வேறு விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் பேசுகையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். தோல் வங்கி அமைக்க வேண்டும் என்றார்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் பேசும்போது, வெடி விபத்தின்போது பட்டாசு ஆலைக் குள் சென்று தீயை அணைக்கும் வகையில் நவீன தீயணைப்பு வாகனம் வேண்டும் என்றார்.
அதைத் தொடர்ந்து பணீந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
மனிதத் தவறுகளால்தான் விபத்துகள் நடக்கின்றன. இதைத் தடுக்க ஆலை நிர்வாகத்தினர் பயிற்சிபெற்ற பணியாளர்களை மட்டுமே பட்டாசுத் தொழிலில் ஈடுபடுத்த வேண்டும். பட்டாசு ஆலைகளில் வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை, தொழிலாளர் துறை இணைந்து அதிக அளவில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகாசி அரசு மருத்துவமனையில் தோல் வங்கி அமைக்க மாநில அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT