Published : 15 Feb 2021 03:13 AM
Last Updated : 15 Feb 2021 03:13 AM
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருங்குளம் கிராமத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் எஸ்பி பேசியதா வது: ஒவ்வொரு கிராமத்திலும், அந்தந்த கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், காவல்துறை- பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கும் கிராம விழிப்புணர்வு குழு அமைக்கப் பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கிராமத்தில் உள்ள சமூக சேவை மனப்பான்மையுள்ள 5 பேர் என, மொத்தம் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இவர்கள் அப்பகுதியில் உள்ள பிரச்சினைகளை காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்து, தீர்த்து வைக்க ஏற்பாடு செய்வர்.
இளைஞர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். வேலை வேண்டுவோர் உரிய சான்றுகளுடன் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் என்னை சந்தித்தால், வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 6,000 சிசிடிவி கேமராக்கள் பொதுமக்களின் உதவியோடு பொருத்தப்பட்டுள்ளன என்றார்.
டிஎஸ்பி வெங்கடேசன், ஆய்வாளர் ராஜசுந்தர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT