Published : 15 Feb 2021 03:13 AM
Last Updated : 15 Feb 2021 03:13 AM
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலயப் பெருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு என்.ஏ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. கீழ வைப்பார் பங்குத்தந்தை ஜெகதீசன் மறையுரை நிகழ்த்தினார்.
பெருவிழா தினமான நேற்று காலை சிறப்பு ஆடம்பர கூட்டுத் திருப்பலி, தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு ச.தே.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. நூற்றாண்டு விழா குழு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர் மறையுரை நிகழ்த்தினார். சிறுவர், சிறுமியர் புதுநன்மை எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து புனித லூர்து அன்னை இளையோர் அமைப்பினர் நடத்திய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசிருடன் கொடியிறக்கம் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அன்பியங்கள் இணைந்து வழங்கிய கலைவிழாவும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆன்றனி புருனோ தலைமையில் பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.
கயத்தாறு
கயத்தாறு தூய லூர்து அன்னை ஆலயத் திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கியது. 9-ம் நாள் விழாவில் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பங்குத் தந்தை சார்லஸ் மறையுரை வழங்கினார். 10-ம் நாள் விழாவில் சாந்தி நகர் யூ பிலி மேய்ப்பு பணி நிலைய இயக்குநர் விசுவாச ஆரோக்கியராஜ் தலைமையில், பாளையங்கோட்டை ஆயர் இல்ல ஆன்ம ஆலோசகர் பெர்க்மான்ஸ் மறையுரை வழங்கினார். பின்னர் திருவிழா நன்றி திருப்பலி நடந்தது.தொடர்ந்து தேரடியில் சிறப்பு ஜெபம் நடந்தது. பின்னர் அன்னையின் தேர் பவனி நடந்தது. திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT