Published : 13 Feb 2021 03:11 AM
Last Updated : 13 Feb 2021 03:11 AM

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 4,280 வாக்குச்சாவடி மையங்கள் ஆட்சியர் ராமன் தகவல்

சேலம்

சேலம் மாவட்டத்தில் ஆயிரத்து 50 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இருந்து துணை வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, மொத்தம் 11 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 4,280 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன,’ என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையம் அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து, துணை வாக்குச்சாவடி மையம் ஏற்படுத்த அரசியல் கட்சியினர், வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ராமன் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் ராமன் பேசும் போது, ‘இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்படி ஆயிரத்து 50 வாக்காளர்கள் வரை ஒரு வாக்குச்சாவடியில் இருக்கலாம் எனவும், 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, துணை வாக்குச்சாவடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 3,277 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் ஆயிரத்து 50 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 1003 உள்ளன. தற்போது, இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின் படி ஆயிரத்து 50 வாக்காளர்களுக்கு மேல் உள்ள துணை வாக்குச்சாவடிகளையும் சேர்த்து மொத்தம் 4,280 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன,’ என்றார்.

கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாஜக, பாமக, விசிக, தமாகா உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் ராமன் பேசினார். படம்: எஸ்.குரு பிரசாத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x