Published : 13 Feb 2021 03:11 AM
Last Updated : 13 Feb 2021 03:11 AM

தி.மலை மாவட்டத்தில் 8 ஊராட்சிகளில் மினி கிளினிக் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

தி.மலை அடுத்த ஆடையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பெண் ஒருவருக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். அருகில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில், திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் ஊராட்சியில் நடைபெற்ற அம்மா மினி கிளினிக் திறப்பு நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா வரவேற்றார். அம்மா மினி கிளினிக்கை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர், அம்மா மினி கிளினிக் மூலம் கிராம மக்கள் பெரிதும் பயனடைந்து வருவதாக தெரிவித்தார். பின்னர் அவர், மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கினார்.

இதையடுத்து, கீழ்பென்னாத் தூர் அடுத்த வேடநத்தம், ராஜந் தாங்கல், தண்டராம்பட்டு அடுத்த கண்ணக்கந்தல், செங்கம் அடுத்த கட்டமடுவு, சேத்துப்பட்டு அடுத்த மன்சூராபாத், பெரணம்பாக்கம், ஓதலவாடி ஆகிய ஊராட்சிகளிலும் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் திறந்து வைத்தார். இதில், கோட்டாட்சியர் தேவி, முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x