Published : 08 Feb 2021 03:11 AM
Last Updated : 08 Feb 2021 03:11 AM

கட்டுமான தொழிலாளர்கள் பொங்கல் பரிசு பெற வாய்ப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நா.முருகப்பிரசன்னா அறிக்கை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலை தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி, சேலை பெற நலவாரிய அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை 0461-2341110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x