Published : 07 Feb 2021 03:15 AM
Last Updated : 07 Feb 2021 03:15 AM
பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மலை மாவட் டம் களம்பூர் காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஆரணி அடுத்த களம்பூரில் சாலை மறியல் நடைபெற்றது. இதில், நிர்வாகிகள் நாராயணசாமி, உதயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன், தீண்டாமை ஒழிப்புமுன்னணி மாவட்டக் குழு உறுப்பி னர் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மேலும், பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங் களை திரும்பப் பெற வேண்டும், இச்சட்டங்களை கண்டித்து புது டெல்லியில் கடந்த 73 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுப்பதை கண்டித்தும், கடந்த 26-ம் தேதி டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும், போராட் டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மீது புதுடெல்லி மற்றும் திருவாரூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி யும், வேளாண் சட்டங்களை சிறந்த சட்டம் என்று நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமரை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் 5 பெண்கள் உட்பட 31 பேரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT