Published : 06 Feb 2021 03:18 AM
Last Updated : 06 Feb 2021 03:18 AM

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆலோசனை

நாமக்கல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் சங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில செயலாளர் முருக செல்வராசன், மாவட்ட பொருளாளர் பிரபு, ஒன்றியச் செயலாளர்கள் சேகர், ஜெகநாதன், மகளிரணி அமைப்பாளர் கு.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரோனா தொற்று காலத்தில் பள்ளிகளின் கட்டமைப்பை சீரமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள உயர்கல்வி ஆணைய அறிவிப்பை கைவிட வேண்டும். தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து 100 சைனிக் பள்ளிகளை ஏற்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.

தொடக்கக் கல்வித்துறையை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x