Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம் தடுப்பூசியை போட்டுக்கொண்ட திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள், எஸ்பி விஜயகுமார்

வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், மாநகராட்சி ஆணையர் சங்கரன், நகர்நல அலுவலர் சித்ரசேனா உள்ளிட்டோர். அடுத்த படம்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். அருகில், எஸ்பி டாக்டர் விஜயகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகரன் உள்ளிட்டோர்.

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 2-வது கட்டமாக கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கின. திருப்பத்தூர் மாவட் டத்தில் ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய குமார் ஆகியோரும் கரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) நேற்று போட்டுக்கொண்டனர்.

உலக மக்களை அச்சுறுத்தி வந்த கரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ‘கோவாக்சின்’ ‘கோவிஷீல்டு’ என்ற 2 தடுப்பூசி மருந்துகளை மத்திய சுகாதாரத்துறை அறிமுகம் செய்தது. முதற் கட்டமாக கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி மருந்து போட முடிவு செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் தினசரி 1,200 பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால், தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் முன்களப் பணி யாளர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள பெரிதாக ஆர்வம் காட்ட வில்லை.

கடந்த மாதம் தொடங்கிய முதற் கட்ட தடுப்பூசி முகாம் தொடக்க நாளில் 1,200 பேருக்கு 175 பேர் மட்டுமே தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். 2-வது நாளில் 54 பேர் மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். அதன்பிறகு, முன்களப் பணியாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

இதைத்தொடர்ந்து, திட்டமிடப் பட்டபடி முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி தொடர்ச்சியாக 12 மையங்களில் போடப்பட்டு வந்தன. முதற்கட்ட முகாமில் இதுவரை 3,000 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரி வித்தனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையினர் என மொத்தம் 9 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட திட்ட மிடப்பட்டுள்ளது.

வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் 2-ம் கட்டமாக கரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் 30 நிமிடங்கள் ஓய்வுக்கு பிறகு, தங்களது வழக்க மான பணிகளை மேற்கொண்டனர். அதன்பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள், வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின,

வேலூர் மாநகராட்சிக்கு உட் பட்ட 1-வது மற்றும் 2-வது மண்டல அலுவலக பணி யாளர்கள், சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 3-வது மற்றும் 4-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனையிலும் கரோனா தடுப்பூசிகள் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தினசரி 100 பேருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் 2-ம் கட்டமாக கரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள், காவல் துறையினர் என 2 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார். இதையடுத்து, முன்னுதாரணமாக மாறிய மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் தங்கவேலு ஆகியோர் கரோனா தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு அதிகாரி களுக்கு சுகாதாரத் துறையினர் சான்றிதழ்களை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள், வருவாய் மற்றும் காவல் துறை யினர், கரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர். கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள் பவர்கள் எந்தவித அச்ச உணர்வு இல்லாமல் தடுப்பூசியை போட்டுக் கொண்டு பொது மக்களுக்கு முன்னுதாரணமாக மாற வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபன், மருத்துவர்கள் சுமதி, சிவக்குமார், மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, வேலூர் மற்றும்திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் கூறும் போது, ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு இது வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர் களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது, 2-ம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடங்கி யுள்ளன. 3 மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. வேலூர் மாவட்டத்தில் 18 ஆயிரம் டோஸ், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத் துக்கு தலா 8 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட வர்களின் அனைத்து விவரங்களும் கணினியில் பதவியேற்றம் செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதேநேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை சுகா தாரத்துறையினர் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண் டவர்களுக்கு இதுவரை எந்தவித உடல் பாதிப்புகளும் நிகழவில்லை.

எனவே, முன்பதிவு செய்தவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x