Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி/ தென்காசி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்அமைப்பு சார்பில் மேலப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கல்யாணராமன் என்பவரை கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு திருநெல்வேலி மாவட்ட தலைவர் கே.ஏ.ஓ.சாதிக் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் யூசுப் அலி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் நவாஸ், பொருளாளர் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் செய்யது மசூது, மாவட்ட துணைத் தலைவர் அப்துல் காதர், புகாரி, ஹாஜா மைதீன் முன்னிலை வகித்தனர். தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் செங்கை பைசல் கண்டன உரையாற்றினார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி புளியங்குடி பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம் அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x