Published : 01 Feb 2021 03:13 AM
Last Updated : 01 Feb 2021 03:13 AM
சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர் ஆகிய மூன்று இடங்களில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைக்க முதல் கட்டமாக ரூ.67.54 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்தது.
விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சிவகாசி- சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம், சாத்தூர் - இருக்கன்குடி - நென்மேனி சாலை ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கைகள் குறித்து முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் கவனத்துக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொண்டு சென்றார்.
இந்நிலையில், சிவகாசி - சாட்சியாபுரம் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நில எடுப்பு மற்றும் பாலப்பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.44.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், சிவகாசி - திருத்தங்கல் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க முதல் கட்டமாக ரூ.11.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், சாத்தூர் - இருக்கன்குடி - நென்மேனி சாலை பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க முதல்கட்டமாக ரூ.11.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT