Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்ப தால், பல்வேறு அரசியல் கட்சி யினர் தேர்தல் பணியாற்ற புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருப்பத்தூர் ஒன்றிய மற்றும் நகரத்துக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
அதன்படி, திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி பொறுப் பாளராக முன்னாள் கவுன்சிலர் டி.ஏ.டி.ரங்கநாதனும், திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளராக ஜே.ஜாவித் ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி உத்தரவின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு நியமித்துள்ளார். இதைத்தொடர்ந்து, புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT