Published : 16 Jan 2021 03:16 AM
Last Updated : 16 Jan 2021 03:16 AM
அயோத்தி ராமஜென்ம பூமி கட்டுமானப்பணிகளுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி கடந்த 14-ம் தேதி நாடு முழுவதும் தொடங் கியது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் ராமஜென்ம பூமி நிதி திரட்டும் நிகழ்ச்சி அரியூர் புரம், நாராயணிபீடத்தில் தொடங்கியது.
நாராயணிபீடம் சார்பில் ரூ.1 லட்சம் காசோலையை அயோத்தி ராமஜென்ம பூமி நிதிக்குழுவினரிடம் சக்தி அம்மா வழங்கி ஆசி வழங்கினார்.
நிகழ்ச்சியில், புரம் பொற் கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பாலாஜி, ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் ஜெகசதீசன், கோட்ட அமைப்பாளர் கணேசன், பாஜக மாநில செயலாளர் கார்த்தி யாயினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT